சிற்றிலக்கியம்
என்பது அளவில் சுருங்கியதாக அமையும்.அகப்பொருள், அல்லது புறப்பொருளில் ஏதேனும்
ஒரு துறையைப் பற்றியதாக அமையும்.கோவை போன்ற
சில சிற்றிலக்கியங்கள் பல துறைகளைக் கொண்டு
அமைவதும் உண்டு.பாடப்பெறும் கடவுள்
அல்லது மன்னன் அல்லது வள்ளல்
ஆகியோருடைய வாழ்வின் ஒரு சிறு கூறு
மட்டுமே விளக்கப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக உலா இலக்கியம் தலைவன்
உலாவரும் காட்சியை மட்டுமே சிறப்பித்துப் பாடப்படுவது.
அறம், பொருள், இன்பம், வீடு
எனும் நான்கு உறுதிப் பொருள்களுள்
ஏதேனும் ஒன்றைத் தருவதாக அமைவது
சிற்றிலக்கியம்.இவ்வகையில் தூது, உலா, பிள்ளைத்தமிழ்,
கலம்பகம், கோவை, குறவஞ்சி போன்ற
பலவகை இலக்கியங்கள் சிற்றிலக்கியம் ஆகும்.தமிழில் சிற்றிலக்கியங்கள்
எனப்படுபவை வடமொழியில் பிரபந்தங்கள் எனப்படுகின்றன. சிற்றிலக்கியங்கள் 96 வகைப்படுகின்றன.
அவற்றைக் கீழே காண்போம்.
1. சதகம்
2. பிள்ளைக்கவி
3. பரணி
4. கலம்பகம்
5. அகப்பொருட்கோவை
6. ஐந்திணைச்
செய்யுள்,
7. வருக்கக்
கோவை
8. மும்மணிக்கோவை
9. அங்கமாலை
10. அட்டமங்கலம்
11. அனுராகமாலை
12. இரட்டைமணிமாலை
13. இணைமணி
மாலை
14. நவமணிமாலை
15. நான்மணிமாலை
16. நாமமாலை
17. பல்சந்தமாலை
18. பன்மணிமாலை
19. மணிமாலை
20. புகழ்ச்சி
மாலை
21. பெருமகிழ்ச்சிமாலை
22. வருக்கமாலை
23. மெய்க்கீர்த்திமாலை
24. காப்புமாலை
25. வேனில்
மாலை
26. வசந்தமாலை
27. தாரகைமாலை
28. உற்பவமாலை
29. தானைமாலை
30. மும்மணிமாலை
31. தண்டகமாலை
32. வீரவெட்சிமாலை
33. வெட்சிக்கரந்தைமஞ்சரி
34. போர்க்கெழுவஞ்சி
35. வரலாற்று
வஞ்சி
36. செருக்களவஞ்சி
37. காஞ்சிமாலை
38. நொச்சிமாலை
39. உழிஞைமாலை
40. தும்பைமாலை
41. வாகைமாலை
42. வாதோரணமஞ்சரி
43. எண்செய்யுள்
44. தொகைநிலைச்செய்யுள்
45. ஒலியந்தாதி
46. பதிற்றந்தாதி
47. நூற்றந்தாதி
48. உலா
49. உலாமடல்
50. வளமடல்
51. ஒருபா
ஒருபது
52. இருபா
இருபது
53. ஆற்றுப்படை
54. கண்படைநிலை
55. துயிலெடை
நிலை
56. பெயரின்னிசை
57. ஊரின்னிசை
58. பெயர்
நேரிசை
59. ஊர்
நேரிசை
60. ஊர்வெண்பா
61. விளக்குநிலை
62. புறநிலை
63. கடைநிலை
64. கையறுநிலை
65. தசாங்கப்பத்து
66. தசாங்கத்தயல்
67. அரசன்விருத்தம்
68. நயனப்பத்து
69. முலைப்பத்து
70. பாதாதிகேசம்
71. கேசாதிபாதம்
72. அலங்காரபஞ்சகம்
73. கைக்கிளை
74. மங்கலவள்ளை
75. தூது
76. நானாற்பது
77. குழமகன்
78. தாண்டகம்
79. பதிகம்
80. சதகம்
81. செவியறிவுறூஉ
82. வாயுறைவாழ்த்து
83. புறநிலைவாழ்த்து
84. பவனிக்காதல்
85. குறத்திப்பாட்டு
86. உழத்திப்பாட்டு
87. ஊசல்
88. எழுகூற்றிருக்கை
89. நாழிகைவெண்பா
90. சின்னப்பூ
91. விருத்தவிலக்கணம்
92. முதுகாஞ்சி
93. இயன்மொழி
வாழ்த்து
94. பெருமங்கலம்
95. பெருங்காப்பியம்
96. சிறுகாப்ப்பியம்
No comments:
Post a Comment