Tuesday, October 15, 2013

இலக்கணம்

இலக்கணம்

I. பொருத்துதல் 

1. ஆர்வலர்-அன்புடையவர்

2. புன்கணீர்-துன்பம் கண்டு பெருகும் கண்ணீர்

3. என்பு        -எலும்பு

4. ஈனும்-தரும்

5. ஆர்வம்-விருப்பம்

6. நண்பு -நட்பு

7. வையகம் -உலகம்

8. என்பிலது -எலும்பு இல்லாதது.(புழு)

9. அன்பிலது -அன்பு இல்லாதது

10. மறம்-வீரம்

11. வற்றல் மரம் -வாடிய மரம்

12. அணியர் -நெருங்கி இருப்பவர்

13. சேய்மை -தொலைவு

14. செய் -வயல்

15. அனையார்-போன்றோர்

16. வண்மை-கொடை

17. கோணி-சாக்கு

18. ஞாலம் -உலகம்

19. உவந்து செய்வோம்-விரும்பிச் செய்வொம்

20. மடவார்-பெண்கள்

21. தகைசால்-பண்பில் சிறந்த

22. ஒதின்-எதுவென்று சொல்லும் போது

23. வானப்புனல்-மழைநீர்

24. தழை        -செடி

25. தழையா வெப்பம்-பெருகும் வெப்பம்

26. தழைக்கவும்        -        குறையவும்

27. ஆற்றவும்                -        நிறைவாக

28. உணா                -        உணவு

29. ஆற்றுணா                -        வழிநடைஉணவு(கட்டுச்சோறு)

30. அரையன்                -        அரசன்

31. வெய்யவினை        -        துன்பம் தரும் செயல்

32. வீறாப்பு                -        இறுமாப்பு

33. பலரில்                -        பலருடைய வீடுகள்

34. புகல் ஒண்ணாதே        -சொல்லாதே

35. சாற்றும்                -        புகழ்ச்சியாகப் பேசுவது

36. கடம்                        -        உடம்பு

37. அவல்                -        பள்ளம்

38. மிசை                -        மேடு

39. ஆடவர்                -        ஆண்கள்

40. நல்லை                -        நல்லதாக இருக்கிறாய்

41. இரட்சித்தல்        -        காப்பாற்றுதல்

42. பதுமத்தான்        -         தாமரையில் உள்ள பிரம்மன்

43. சர்வகலாசாலை        -        பல்கலைக்கழகம்

44. புரம்        -         சிறந்த ஊர்களைக் குறிக்க பயன்படுவது (காஞ்சி-காஞ்சிபுரம்)

45. கடிகை-அணிகலன்

46. ஈரம்        - அன்பு

47. அளைஇ        -கலந்து

48. படிறு        -வஞ்சம்

49. செம்பொருள்        -மெய்ப்பொருள்

50. அகன்        -அகம், உள்ளம்

51. அமர்        -விருப்பம்

52. அமர்ந்து        -விரும்பி

53. முகன்-முகம்

54. இன்சொலன்        -இனிய சொற்களைப் பேசுபவன்

55. அமர்ந்து        -விரும்பி

56. அகத்தான் ஆம்        -உள்ளம் கலந்து

57. துவ்வாமை        -வறுமை

58. யார் மாட்டும்        -எல்லாரிடமும்

59. இன்புறூஉம்        -இன்பம் தரும்

60. துன்புறூஉம்        -துன்பம் தரும்.

61. அல்லவை        -பாவம்

62. நாடி        -விரும்பி

63. பயக்கும்        -கொடுக்கும்

64. தலைப்பிரியாச் சொல்        -நீங்காத சொற்கள்

65. சிறுமை        -துன்பம்

66. மறுமை        -மறுபிறவி

67. இம்மை        -இப்பிறவி

68. ஈன்றல்        -தருதல், உண்டாக்குதல்

69. வன்சொல்        -கடுஞ்சொல்

70. எவன்கொலோ        -ஏனோ?

71. கவர்தல்        -நுகர்தல்

72. அற்று        -அதுபோன்று

புகழ்பெற்ற நூலாசிரியர்கள்

1. ஊரும் பேரும் என்ற நூலை எழுதியவர்                -ரா.பி சேதுப்பிள்ளை

2. குற்றாலக் குறவஞ்சியின் ஆசிரியர்        -திரிகூட ராசப்பக் கவிராயர்

3. ஜீவகாருண்ய ஒழுக்கம் நூலை எழுதியவர்-இராமலிங்க அடிகளார்.

4. மனுமுறை கண்டவாசகம் என்ற நூலை எழுதியவர்-இராமலிங்க அடிகளார்.

5. திருவருட்பாவை இயற்றியவர்        -        இராமலிங்க அடிகளார்.

6. பாரததேசம் என்ற காவயித்தை இயற்றியவர்--மகாகவி பாரதியார்

7. நான்மணிக்கடிகையின் ஆசிரியர்--விளம்பிநாகனார்.

8. இசையமுது என்ற நூலின் ஆசிரியர்--புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்

9. பழமொழி நானூறு என்ற நூலின் ஆசிரியர்--முன்றுறை அரையனார்.

10. சாகுந்தலம் என்ற நூலின் ஆசிரியர்--காளிதாசர்

11. திண்ணையை இடித்துத் தெருவாக்கு என்ற காவியத்தை இயற்றியவர்--தாராபாரதி

12. புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு என்ற நூலின் ஆசரியர்--தாராபாரதி

13. செய்யும் தொழிலே தெய்வம் என்ற நூலின் ஆசரியர்-பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்.

14. ”அந்தக்காலம் இந்தக் காலம்” என்ற நூலின் ஆசிரியர்-உடுமலை நாராயண கவி.

 இத்தொடரால் குறிக்கப்படும் சான்றோர்

1. திருவருட்பிரகாச வள்ளலார் என அழைக்கப்படுபவபர்-இராமலிங்க அடிகளார்

2. வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் தானும் வாயடியதாகக் கூறியவர்.--இராமலிங்க அடிகளார் (எ) திருவருட்பிரகாச வள்ளலார்.

3. செந்நாப்போதார், தெய்வப்புலவர், நாயனார் என்ற பெயர்களால் சிறப்பித்துக் கூறப்படுபவர்-திருவள்ளுவர்

4. தமிழ்த்தாத்தா என அழைக்கப்படுபவர்--உ.வே.சாமிநாதர்.

5. வேங்கடரத்தினம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்--உ.வே.சாமிநாதர்.

6. ”முயற்சி திருவினையாக்கும்” எனக் கூறியவர்--திருவள்ளுவர்

7. “பாட்டுக்கொரு புலவன்” என அழைக்கப்படுபவர்--பாரதியார்

8. ”புரட்சிக் கவிஞர்” என அழைக்கப்படுபவர்---பாரதிதாசன்

9. ”பாவேந்தர்” என அழைக்கப்படுபவர்--பாரதிதாசன்

10. வைக்கம் வீரர் என அழைக்கப்பட்டவர்-ஈ.வெ.ரா

11. “பெரியார்” என அழைக்கப்பட்டவர்--ஈ.வெ.ராமசாமி

12. ”தேசியம் காத்த செம்மல்” என அழைக்கப்படுபவர்--பசும்பொன் முத்துராமலிங்க தேவர்.

13. ”மக்கள் கவிஞர்” என அழைக்கப்பட்டவர்-பட்டுக்கோட்டைக் கல்யாண சுந்தரம்.

17. ”பகுத்தறிவுக்கவிராயர்” என அழைக்கப்படுபவர்-உடுமலை நாராயண கவி.

3.பிரித்தெழுதுக

1. அன்பகத்து இல்லா        -அன்பு+அகத்து+இல்லா

2. வன்பாற்கண்                -வன்பால்+கண்

3. தளிர்த்தற்று                -தளிர்த்து+அற்று

4. தமக்குரியர்                -தமக்கு +உரியர்

5. அன்பீனும்                        -அன்பு+ஈனும்

6. நிழலருமை                -நிழல்+அருமை

7. வழக்கென்ப                -வழக்கு+என்ப

8. தரமில்லை                -தரம்+இல்லை

9. நன்கணியர்                -நன்கு+அணியர்

10. புகழிழந்தேன்                -புகழ்+இழந்தேன்

11. தமிழழகு                        -தமிழ்+அழகு

12. மலரடி                        -மலர்+அடி

13. தேனருவி                        -தேன்+அருவி

14. புறநானூறு                -புறம்+நான்கு+நூறு

15. இனிதீன்றல்                -இனிது+ஈன்றல்


ஆங்கில சொற்களுக்கு நேரான தமிழ்ச்  சொற்களை அறிதல்

1. டி.வி                -        தொலைக்காட்சி

2. ரேடியோ        -        வானொலி

3. டிபன்                -        சிற்றுண்டி

4. டீ                -        தேநீர்

5. கரண்ட்        -        மின்சாரம்

6. டெலிபோன்        -        தொலைபேசி

7. ஃபேன்        -        மின்விசிறி

8. சேர்                -        நாற்காலி

9. லைட்        -        விளக்கு

10. தம்ளர்        -        குவளை

11. சைக்கிள்        -        மிதிவண்டி

12. பிளாட்பாரம்        -        நடைமேடை

13. ஆபீஸ்        -        அலுவலகம்

14. சினிமா        -        திரைப்படம்

15. டைப்ரைட்டர்        -        தட்டச்சுப்பொறி

16. ரோடு        -        சாலை

17. பிளைட்        -        வானூர்தி

18. பேங்க்        -        வங்கி

19. தியேட்டர்        -        திரையரங்கு

20. ஆஸ்பத்திரி        -        மருத்துவமனை

21. பிளாக்போர்டு        -        கரும்பலகை

22. இனிஷியல்        -        முன்னெழுத்து

23. கம்பியூட்டர்        -        கணினி

24. காலேஜ்                -        கல்லூரி

25. யுனிவர்சிட்டி        -        பல்கலைக்கழகம்

26. டெலஸ்கோப்        -        தொலைநோக்கி

27. தெர்மாமீட்டர்        -        வெப்பமானி

28. இண்டர்நெட்        -        இணையம்

29. ஸ்கூல்        -        பள்ளி

30. சயின்ஸ்        -        அறிவியல்

31. மைக்ரோஸ்கோப்        -        நுண்ணோக்கி

32. நம்பர்        -        எண்

33. போஸ்ட் ஆபீஸ்        -        அஞ்சல் நிலையம்

34. பஸ் ஸ்டான்ட்        -        பேருந்து நிலையம்

35. டிரைன்                -        தொடர்வண்டி

36. போட்டோ                -        புகைப்படம்

37. கவர்னர்                -        ஆளுநர்

38. ஸ்வீட் ஸ்டால்        -        இனிப்பகம்

39. டியூப் லைட்        -        குழல் விளக்கு

40. கார்                        -        மகிழுந்து

41. காபி                        -        குளம்பி நீர்

42. பிளாஸ்டிக்        -        நெகிழி

43. மீடியா                -        ஊடகம்

44. தெர்மாகூல்        -        நெட்டிகள்


ஒலி வேறுபாடு அறிந்து சரியான பொருளையறிதல்

1. அமுதன்...........குடித்தான்.  (பால் / பல்)                  விடை=பால்

2. தென்றல்...............படித்தாள். (படம் /பாடம்)            விடை-பாடம்

3. சிற்பி....................செதுக்கினான். (சிலை/சீலை)      விடை-சிலை

4. கடை ஏழு வள்ளல்களுள் ஒருவர்................... .(பாரி/பரி)              விடை-பாரி

5. முகிலனின் பாட்டி …............. கூறுவார்.      (கதை/காதை)         விடை-கதை

6. மல்லிகை.............வீசியது. (மனம், மணம்)        விடை-மணம்

7. பூமியை …............வருவேன். (வலம், வளம்)         விடை-வலம்

8. …...............பதுங்கிப் பாயும். (புலி, புளி)             விடை-புலி

9. முகத்தில் …........முறுவல் வேண்டும்.(புன், புண்)    விடை-புன்

10. நாய்-------------(வால், வாள்) நிமிராது.           விடை-வால்

11. உயர்ந்து நிற்பது.............(மலை, மளை)       விடை-மலை

12. வானத்தில் இருந்து பெய்வது................(மழை, மலை)         விடை-மழை

13. உழவர்கள் ஆடித்திங்களில் …..................பூட்டுவர். (பொண்ணேர், பொன்னேர்) விடை -பொன்னேர்

14. மழை நீரை...............என்பர். ( வானப்புனல், வாணப்புனல்)              விடை-வானப்புனல்

இலக்கியம்

1. திருக்குறளை இயற்றியவர்--திருவள்ளுவர்

2. திருக்குறள் மூன்று  பிரிவுகளை உடையது.

3. திருக்குறளிலுள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை-133

4. திருக்குறளிலுள்ள மொத்த பாடல்களின் எண்ணிக்கை-1330

5. திருக்குறள் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

6. திருவள்ளவர்ஆண்டு கணக்கிடும் முறை--கிறித்து ஆண்டு+31 (எ.கா --2013+31=2044)

7. குறிஞ்சிப்பாட்டு பத்துப்பாட்டு நூல்களுள் ஒன்றாகும்.

8. நாலடியார் -பதினெண்கீழக்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

9. நாலடியார் 400 பாடல்களைக் கொண்ட நூலாகும்.

10. சமணமுனிவர் பலர்  பாடிய நூல்களின் தொகுப்பு --நாலடியார்

11. நான்மணிக்கடிகை பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

12. நான்மணிக்கடிகையின் ஒவ்வொரு பாடலும் 4 அறக்கருத்துகளைத் தெரிவிக்கிறது.

13. பாரதிதாசன் எழுதிய கவிதை நூற்கள்-(பாண்டியன் பரிசு, குடும்ப விளக்கு, அழகின் சிரிப்பு,இசையமுது)

14. பழமொழி நானூறு பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றாகும்.

15. பகுத்தறிவாளர் சங்கத்தை அமைத்தவர்--ஈ.வெ.ரா

16. “பெண்களுக்கு நகையோ அழகான உடையயோ முக்கியம் இல்லை; அறிவும் சுயமரியாதையும்தான் மிக முக்கியம்.” என முழங்கியவர்--ஈ.வெ.ராமசாமி

17. புறநானூறு எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.

15. பாரதிதாசனின் இயற்பெயர்--கனக சுப்புரத்தினம்


தமிழ் இலக்கணம்

1. உயிரெழுத்க்களின் எண்ணிக்கை-12

2. மெய்யெழுத்துக்களின் எண்ணிக்கை-18

3. உயிர்மெய் எழுத்துக்களின் எண்ணிக்கை-216

4. ஆய்த எழுத்துக்களின் எண்ணிக்கை-1

5. தமிழில் குறில் எழுத்துக்களின் எண்ணிக்கை-5 (அ, இ, உ, எ,ஒ)

6. தமிழில் நெடில் எழுத்துக்களின் எண்ணிக்கை-7 (ஆ,ஈ,ஊ,ஏ,ஐ,ஓ,ஔ)

7. சொல் நான்கு வகைப்படும்

8.

இலக்கணக்குறிப்பு

இரட்டைக்கிளவி

ஒலியை உணர்த்தும் சொற்கள், இரண்டு இரண்டாகவே சேர்ந்து வரும். அவ்வாறு வரும்பொழுது , அஃது ஒலிக்குறிப்பை வெளிப்படுத்தும். இதனைப் பிரித்தால் பொருள் தராது

(எ.கா) மணமண, கணகண, சளசள, படபட, பளபள, குடுகுடு, வளவள, தணதண, மடமட, தமதம, சடசட


No comments: